#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#தஞ்சை : ஊசியை முழுங்கிய சிறுமி.. திடீர் மூச்சுத்திணறல்.. மருத்துவர்கள் செய்த சாதனை செயல்.!
உள்ளே சென்ற ஊசி :
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே ஒரு 14 வயது சிறுமி புதிய உடை ஒன்றை சில தினங்களுக்கு முன்பாக அணிய முயன்றார். அப்போது அந்த உடையில் இருந்து 4 சென்டிமீட்டர் ஊசி அவருடைய வாய் வழியே உள்ளே சென்றுள்ளது. இது சிறுமியின் நுரையீரலில் சிக்கி இருக்கிறது.
இதனால் சிறுமிக்கு மூச்சு திணறல் கடுமையாக ஈர்க்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
பிரான்காஸ்கோப்பி
சிறுமியின் நுரையீரலில் ஊசி இருப்பதை உறுதி செய்து பிரான்காஸ்கோப்பி எனும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கத்தியோ, ரத்தமோ இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்கின்றனர். வெறும் 3லிருந்து 4 நிமிடங்களுக்குள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் மருத்துவர்கள் ஊசியை நீக்கி அந்த சிறுமியின் உயிரை காப்பாற்றி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: அக்காவின் திருமண நாளில் தங்கை எடுத்த விபரீத முடிவு... நடந்தது என்ன.? போலீசார் விசாரணை..
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை.! ஜுன் இல்லை; ஜுலைதான் வரும்.! வெளிவந்த முக்கிய அறிவிப்பு.!