அக்காவின் திருமண நாளில் தங்கை எடுத்த விபரீத முடிவு... நடந்தது என்ன.? போலீசார் விசாரணை..



Young girl committed suicide in sister marriage day

கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யராஜ் - ஆரோக்கியசெல்வி தம்பதியினர். இவர்களுக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மூன்றாவது மகளான ஜெனிஃபர் உறவினர் வீட்டு பையனான மார்ட்டின் என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். 

இந்நிலையில் மார்ட்டின் குடும்பத்தினர் ஜெனிபர் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். அதற்கு திவ்ய ராஜ் 2 வது மகளுக்கு திருமணம் நடக்காமல் எப்படி மூன்றாவது மகளுக்கு திருமணம் செய்வது என கூறியுள்ளனர். அதற்கு மார்ட்டின் குடும்பத்தினர் நீங்கள் பெண்ணை மட்டும் கொடுத்தால் போது வேறு எதுவும் வேண்டாம் என கூறியுள்ளனர். திவ்யராஜ் மற்றும் அவரது மனைவி 2 வது மகளின் திருமணம் முடிந்த உடன் சீர் வரிசை செய்வதாக கூறியுள்ளனர். 

அதனையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் மார்ட்டின் - ஜெனிபர் தம்பதியினருக்கு திருமணம் முடிந்துள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மார்ட்டின் வெளிநாட்டில் வேலைக்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில் ஜெனிபரின் அக்காவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைப்பெற்றுள்ளது. அத்திருமணத்திற்கு ஜெனிபரின் மாமியார் மற்றும் நாத்தனார் வந்துள்ளனர்.

இதையும் படிங்க: #Breaking: மாலை 4 மணிவரையில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

kumbakonam

அங்கு ஜெனிபரின் அக்காவிற்கு சீர் வரிசைகள் செய்யப்பட்டதை பார்த்து ஜெனிபரிடம் உனக்கு மட்டும் எந்த சீர் வரிசையும் செய்யவில்லை என கூறி சண்டையிட்டு ஜெனிபரை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அன்று இரவு ஜெனிபர் தனது தாயை தொடர்பு கொண்டு அழுது கொண்டே தன்னுடைய மாமியார் உனக்கு மட்டும் ஏன் எந்த சீர் வரிசையும் செய்யவில்லை என கேட்டு கொடுமை படுத்துவதாக கூறியுள்ளார். அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே தொடர்பு துடிக்கப்பட்டதை அடுத்து அதிர்ச்சியடைந்த ஜெனிபரின் தாய் மகனை விட்டு பார்த்து வரும்படி கூறியுள்ளார்.

அங்கு சென்று பார்த்த போது ஜெனிபர் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மகளின் சாவுக்கு மாமியார் இருதய மேரி தான் என கூறி உடனே அவரை கைது செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் ஜெனிபரின் குடும்பத்தினர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? அதிமுகவுடன் கரம்கோர்க்கும் காங்கிரஸ்?.. முன்னாள் அமைச்சரின் பரபரப்பு ட்விட்.!