"ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டும் ஜாதி., 10 பேர் சேர்ந்து என்னை தாக்கினார்கள்" - இளைஞர் கண்ணீர் பேட்டி.!
மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேடு பகுதியில், இன்று உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனிடையே, தன்னை காவல்துறையினர் தாக்கியதாகவும், பல போட்டிகளில் பரிசு வென்றுள்ள தன்னை, ஜாதி பார்த்து நிராகரித்துள்ளனர். ஜல்லிக்கட்டில் மீண்டும் ஜாதி வந்துவிட்டது என மாடுபிடி வீரர் கண்ணீருடன் தெரிவித்த சம்பவம் நடந்துள்ளது.
ஜாதி பார்த்து நிராகரிப்பு?
இதுதொடர்பாக அவர் பேசுகையில், "கடந்த 2 ஆண்டுகளாக சிறந்த வீரராக நான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். ஜாதியை பார்த்து எனக்கு நிராகரிப்பு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டில் ஜாதி வந்துவிட்டது. டோக்கன் எனக்கு கேட்டுத்தான் கிடைத்தது. உங்களுக்கு நாங்கள் போடமுடியாது என கூறுகிறார்கள். கருப்பாயூரணி கார்த்திக்கு நேரடியாக அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அவரைப்போல இவருக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
ஜல்லிக்கட்டில் ஜாதி பாக்குறாங்க... அசிங்கமா இருக்கு சார்... 10 போலீசாரின் அடி.. வலியால் துடித்து அழுத வீரர்!#Palamedu #PalameduJallikatu #PalameduJallikatu2025 #PalameduJallikatuLive #Madurai #Jallikatu #Jallikattu2025 #JallikatuLive #NewsTamil #TamilNews #NewsTamil24x7 pic.twitter.com/ZGZfmrShZI
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) January 15, 2025
இதையும் படிங்க: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் மரணம்; பெற்றோரை பார்த்த ஆவலில், அடுத்த நொடி நடந்த சோகம்.!
கண்ணீருடன் பேட்டி
அனைவரும் ஒருசார்பாக இருக்கின்றனர். காலை 5 மணிமுதல் நாங்கள் காத்திருக்கிறோம். கருப்பாயூரணி கார்த்தி சிறந்தவராக இருந்தாலும், இந்த முறை அவரின் குழுவே உள்ளே நுழைந்தது. ஜாதி பார்க்கிறார்கள். என்னை தாக்கி வெளியே அனுப்பிவிட்டனர். நான் காயமடைந்து வந்திருந்தாலும், மகிழ்ச்சியாக வந்திருப்பேன். ஆனால், ஜாதி ரீதியாக தாழ்த்தி அனுப்புகிறார்கள். என்னை எதிர்பார்த்து ஊரே காத்திருக்கிறது" என வருத்தத்துடன் கூறினார்.
இதையும் படிங்க: மதுரை: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 58 வயது எஸ்ஐ சஸ்பெண்ட்!