திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் மரணம்; பெற்றோரை பார்த்த ஆவலில், அடுத்த நொடி நடந்த சோகம்.!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் செல்லப்பெருமாள். இவரின் மனைவி அபிராமி. தம்பதிகள் இருவரும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். ஜன.13 ம் தேதியான நேற்று, தம்பதிகள் டிராகரில் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தார்கள். அப்போது, டிராக்டரை கருப்பையா இயக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: மதுரை: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 58 வயது எஸ்ஐ சஸ்பெண்ட்!
டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சோகம்
அச்சமயம், தம்பதிகளின் வீட்டிற்கு அருகே டிராக்டர் வந்தபோது, பெற்றோர் டிராக்டரில் வருவதை கண்ட சிறுவன் ராஜ முகிலன், அவர்களை நோக்கி ஓடி இருக்கிறார்.
எதிர்பாராத விதமாக அப்போது சிறுவன் டைரக்டரின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடையவே, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரை - தூத்துக்குடி புதிய இரயில் பாதை வேண்டாம் என எழுதிக்கொடுத்த தமிழ்நாடு அரசு; மத்திய அமைச்சர் பதில்.!