மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாகத்தில் தண்ணீரென., தின்னர் குடித்த 2 வயது குழந்தை பரிதாப பலி; நெஞ்சை உலுக்கும் சோகம்.!
குழந்தை இருக்கும் வீட்டில் அலட்சியத்துடன் செயல்பட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இதுவே சாட்சி.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், கரிசக்காலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). இவரின் 2 வயது குழந்தை ருத்ரபாண்டி. இவர் தனது குழந்தையுடன் உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, தாகத்தில் இருந்த குழந்தை ருத்ரபாண்டி தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து மயங்கி இருக்கிறது. குழந்தை அமைதியாக படுத்துள்ளதே என எண்ணி அதனை தூக்கியபோது, வாயில் தின்னர் வாசனை இருந்தது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, குழந்தையை அவசர கதியில் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.