இளம் பெண்ணிற்கு ஆபாச மெசேஜ்... தட்டி கேட்ட கணவன் வெட்டி படுகொலை.!! இளைஞர்கள் வெறி செயல்.!!



man-brutally-murdered-in-sivaganga-creates-tension-rela

சிவகங்கை அருகே மனைவிக்கு தவறாக மெசேஜ் அனுப்பியதை தட்டி கேட்டதால் கணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி இறந்த நபரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பெண்ணிற்கு ஆபாச மெசேஜ்

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தெருவை சேர்ந்த பெண்ணிற்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆபாச மெசேஜ்களை செல்போன் மூலம் அனுப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்தப் பெண் தனது கணவரிடம் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை தட்டி கேட்டிருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர்.

tamilnadu

வெட்டி படுகொலை

அந்தப் பெண்ணின் கணவர் தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து அந்த இளைஞரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும்  5 இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: "63 வயசுல தேவையா கோபி..." திருமண ஆசை காட்டி சித்த வைத்தியருக்கு ஆப்பு.!! நகைகளுடன் கம்பி நீட்டிய பெண்.!!

சாலை மறியலால் பரபரப்பு

இந்நிலையில் தனது கணவனை கொலை செய்த 5 நபர்களையும் உடனடியாக கைது செய்து அவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டும் என இறந்த நபரின் மனைவி சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும் அவருடன் சேர்ந்து குடும்பத்தினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் சிவகங்கை மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: "பாதுகாப்பே இல்லையா..." ஜிம்மில் பெண் மருத்துவரின் ஆபாச வீடியோ பதிவு.!! சிம்பு கைது.!!