"பாதுகாப்பே இல்லையா..." ஜிம்மில் பெண் மருத்துவரின் ஆபாச வீடியோ பதிவு.!! சிம்பு கைது.!!



police-arrested-a-youth-for-taking-obscene-video-of-a-l

மதுரையில் பெண் மருத்துவர் உடற்பயிற்சி செய்வதை வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஜிம் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பெண் மருத்துவரை ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்

மதுரையில் இயங்கி வரும் பிரபலமான உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்வதற்காக பெண் மருத்துவர் சென்றிருக்கிறார். இந்நிலையில் பெண் மருத்துவர் உடற்பயிற்சி செய்வதை அங்கிருந்த இளைஞர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் மருத்துவர் இது குறித்து அந்த நபரிடம் விவாதம் செய்திருக்கிறார்.

tamilnadu

பெண் மருத்துவருடன் வாக்குவாதம்

மேலும் இது தொடர்பாக பெண் மருத்துவருடன் அந்த நபர் வாக்குவாதம் செய்திருக்கிறார். முதலில் திமிராக பதிலளித்த அந்த இளைஞர் பின்னர் அமைதியாக பேசியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து ஜிம்மின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: திருச்சியில் பரபரப்பு... கட்டுகட்டாக பணம், போதை மாத்திரைகள்.!! 7 பேர் கும்பல் கைது.!!

கைது செய்யப்பட்ட குற்றவாளி

காவல் துறையின் விசாரணையில் அந்த இளைஞர் பெண் மருத்துவர் உடற்பயிற்சி செய்வதை ஆபாசமாக வீடியோ எடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பெண் மருத்துவரை ஆபாச வீடியோ பதிவு செய்த கொட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: "வீடியோ வரலைனா வீடு புகுந்து வெட்டுவேன்..." 14 வயது மாணவிக்கு மிரட்டல்.!! 5 இளைஞர்கள் கைது.!!