மீனாட்சியின் அருளைப்பெற்ற விஜய்.. ரசிகர் கொடுத்த இன்ப அதிர்ச்சி கிப்ட்.!
"63 வயசுல தேவையா கோபி..." திருமண ஆசை காட்டி சித்த வைத்தியருக்கு ஆப்பு.!! நகைகளுடன் கம்பி நீட்டிய பெண்.!!

மறுமணம் செய்வதற்காக செய்தித்தாளில் விளம்பரம் செய்த முதியவரை பெண் ஒருவர் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண்ணை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
63 வயது சித்த வைத்தியர்
திருவண்ணாமலையைச் சேர்ந்த 63 வயதான சித்த வைத்தியர் மறுமணம் செய்து கொள்வதற்காக செய்தித்தாளில் விளம்பரம் செய்திருக்கிறார். இதனைப் பார்த்து அவரை தொடர்பு கொண்ட சென்னையைச் சேர்ந்த கீதா என்ற பெண் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார். அவரது பேச்சை நம்பி திருமண ஆசையுடன் சென்னை சென்றிருக்கிறார் சித்த வைத்தியர்.
நகைகளுடன் தலைமுறைவு
இதனையடுத்து உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறிய அந்தப் பெண் சித்த வைத்தியரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு உறவினரை பார்த்து வருவதாக கூறி சென்றிருக்கிறார். நீண்ட நாட்களாகியும் அவர் திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சித்த வைத்தியர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகாரளித்தார்.
இதையும் படிங்க: "பாதுகாப்பே இல்லையா..." ஜிம்மில் பெண் மருத்துவரின் ஆபாச வீடியோ பதிவு.!! சிம்பு கைது.!!
கைது செய்து விசாரணை
அவரது புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகையுடன் தலைமறைவான பெண்ணை கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறது.
இதையும் படிங்க: திருச்சியில் பரபரப்பு... கட்டுகட்டாக பணம், போதை மாத்திரைகள்.!! 7 பேர் கும்பல் கைது.!!