மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாடக காதல்... 17 வயது சிறுமி கற்பழிப்பு.!! ஆட்டோ ஓட்டுநர் கைது.!!
ஆலடி அருகே 14 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 வயது சிறுமியுடன் காதல்
ஆலடி அருகே உள்ள அயப்பாக்கம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோபிநாத்(25). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியை காதலித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அவர்களது புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
சிறுமி கடத்தல்
பள்ளி மாணவி காணாமல் போனது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் கோபிநாத் அவரை சேலத்திற்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சேலத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு ஆலடி மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோபிநாத் திருமண ஆசை கூறி சிறுமியை கடத்திச் சென்றது தெரிய வந்தது.
இதையும் படிங்க: நாட்டு பட்டாசு வெடித்து சோகம்; 22 வயது இளைஞர் பரிதாப பலி.. தீபாவளியன்று துயரம்.!
போக்சோ வழக்கு பதிவு
மேலும் காவல்துறையின் விசாரணையில் சிறுமியை சேலத்திற்கு கடத்திச் சென்ற கோபிநாத் தனது நண்பன் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையிலடைத்தனர். காதல் என்னும் போர்வையில் சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: 16 வயது சிறுவன் செய்யிற வேலையா இது? நிதிநிறுவன ஊழியரிடம் லிப்ட் கேட்டு வழிப்பறி.. மூவர் கைது.!