திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவியை கொல்ல முயன்ற கணவன்... மருமகனை அடித்தே கொன்ற மாமனார்.!! அதிர்ச்சி சம்பவம்.!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளை கொல்ல முயன்ற மருமகனை, மாமனார் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 65 வயது நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியுடன் தகராறு
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகாதேவன் என்பவரது மகள் ருக்குவிற்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கிளியனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா(35) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கல் உடைக்கும் வேலை செய்து வந்த ராஜா தினமும் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவி ருக்குவை கொடுமை செய்திருக்கிறார்.
பெட்ரோல் ஊற்றிக் கொலை முயற்சி
கணவர் உழைத்த காசு முழுவதையும் குடித்தே அழிப்பதால் ருக்கு கூலி வேலை செய்து தனது குழந்தைகளை கவனித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி தனது மனைவி மீது சந்தேகப்பட்ட ராஜா அவருடன் தகராறு செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மனைவியின் உடலில் பெட்ரோல் ஊற்றி நெருப்பை பற்ற வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் அலறி துடித்த ருக்குவின் குரலை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தனியார் பள்ளியில் கொடுமை... 17 வயது மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு.!! தாளாளர், வார்டன் அதிரடி கைது.!!
கட்டையால் அடித்து மருமகன் படுகொலை
தனது மகளை கொலை செய்ய முயற்சி செய்ததால் ஆத்திரத்திலிருந்த சகாதேவன் தனது மருமகன் ராஜாவை உருட்டு கட்டையால் பலமாக தாக்கி இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சகாதேவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "வட்டியும் வரல முதலும் வரல.." பைப்பால் தாக்கப்பட்ட ஆசிரியர்.!! பைனான்சியர் உட்பட 3 பேர் கைது.!!