திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தனியார் பள்ளியில் கொடுமை... 17 வயது மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு.!! தாளாளர், வார்டன் அதிரடி கைது.!!
திருப்பூர் நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 17 வயது மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வார்டன் உட்பட 3 பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை
திருப்பூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் தொலைவில் இருந்து வரும் மாணவர்கள் தங்கி படிப்பதற்காக விடுதி வசதியும் உள்ளது. இந்நிலையில் விடுதியில் வார்டனாக பணிபுரிந்து வரும் சரண் என்ற 25 வயது இளைஞர் விடுதியில் தங்கியிருந்துக்கும் 17 வயது மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.
நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம்
தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பள்ளியின் தாளாளர் சுரேஷ்குமாரிடம் பெற்றோர்கள் புகார் செய்துள்ளனர். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் காவல்துறையின் உதவியை நாடினர்.
இதையும் படிங்க: "வட்டியும் வரல முதலும் வரல.." பைப்பால் தாக்கப்பட்ட ஆசிரியர்.!! பைனான்சியர் உட்பட 3 பேர் கைது.!!
கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள்
இதனைத் தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் பள்ளியின் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விடுதியின் வார்டன் சரணை கைது செய்தனர். மேலும் பெற்றோர் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்க மறுத்த பள்ளியின் தாளாளர் சுரேஷ்குமார் மற்றும் தலைமை வார்டன் ரமேஷ்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 18 வயதில் கொலை கேஸ்., 19ல் துள்ளத்துடிக்க படுகொலை.. திருச்சியில் நடுரோட்டில் சினிமா பாணியில் பயங்கரம்.. அலறிய பொதுமக்கள்.!