திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
போலி சாவி தயாரித்து சோறுபோட்ட முதலாளிக்கு துரோகம்; சீர்காழியில் அதிர்ச்சி சம்பவம்.!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் தனியார் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு அந்நகரிலேயே 2 கிளைகள் இருக்கின்றன. இந்நிலையில், சம்பவத்தன்று இரண்டு கடைகளின் கல்லாப்பெட்டியில் இருந்து ரூ.2 இலட்சம் பணம் மாயமானது.
காவல்துறை விசாரணை
இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் ஜவுளிக்கடைக்கு வந்து, கடையின் சாவியை பயன்படுத்தி கடைக்குள் வந்து பணம் திருடி சென்றது தெரியவந்தது.
இதையும் படிங்க: மகளிர் விடுதிக்குள் புகுந்து செல்போன் திருட்டு; ஸ்மார்ட் போனை திருடி ஸ்மார்ட் பிசினஸ்.. 3 பேர் கைது.!
முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி செயல்
சிசிடிவி கேமிரா ஆதாரத்துடன் சர்ச்சைக்குரிய நபர் குறித்து விசாரித்தபோது, அவர் முன்னாள் ஊழியர் முகமது பகத் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், முன்னாள் ஊழியரான பகத், பணியில் இருக்கும்போதே போலி சாவி தயாரித்து வைத்து, பின் பணியில் இருந்து நின்று திருட்டு கைவரிசையில் ஈடுபட்டது அம்பலமானது.
இதையும் படிங்க: #சீர்காழி : அரசு டாஸ்மாக்கின் அலட்சியம், எக்ஸ்பயரான பீர் விற்பனை.. துடிதுடித்த இரு உயிர்கள்.!