பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
மகளிர் விடுதிக்குள் புகுந்து செல்போன் திருட்டு; ஸ்மார்ட் போனை திருடி ஸ்மார்ட் பிசினஸ்.. 3 பேர் கைது.!
சென்னையில் உள்ள முத்துசாமி சாலை பகுதியில் அரசு பல்மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் நபர்களுக்கு என தங்கும் விடுதி தனித்தனியே இருக்கிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று மகளிர் விடுதியில் தங்கியிருந்த பெண்களின் 6 ஸ்மார்ட்போன்கள் மாயமாகின. இந்த விஷயம் குறித்து விடுதி நிர்வாகத்திடம் முறையிட்டு, சிசிடிவி கேமிராவை ஆய்வுசெய்தபோது இளைஞர் செல்போனை திருடி செல்லும் காட்சிகள் வெளியானது.
இதையும் படிங்க: "சிறுமி ஒருவருக்கு ரூ.30 ஆயிரம்" - மகளின் தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்; சென்னையில் பகீர்.!!
இளைஞரின் அதிர்ச்சி செயல்
இதனையடுத்து, பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட கார்த்திக் ராஜா @ கொசு கார்த்திக்கை கைது செய்தனர். அவர் செல்போன் திருடியதும் உறுதி செய்யப்பட்டது.
செல்போன் திருட்டில் ஈடுபட்ட கொசுவின் நண்பர்கள் செல்போன் கடை வைத்து நடத்தி வரும் நிலையில், அவர்கள் வாயிலாக செல்போனை விற்பனை செய்ததும் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அதிகாரிகள் கொசு கார்த்திக், அவரின் நண்பர்கள் 2 பேரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: 17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த 70 வயது கிழவன்; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!