மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#சீர்காழி : அரசு டாஸ்மாக்கின் அலட்சியம், எக்ஸ்பயரான பீர் விற்பனை.. துடிதுடித்த இரு உயிர்கள்.!
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி அருகே காரைமேடு பகுதியில் வசித்து வரும் சார்லஸ் என்ற 27 வயதை இளைஞரும், மணிகண்டன் என்ற 31 வயது இளைஞனும் நெருங்கிய நண்பர்கள். நேற்று பிற்பகல் நேரத்தில் இவர்கள் இருவரும் மது அருந்துவதற்காக தென்னால குடி அரசு டாஸ்மாக் கடையில் டின்பீர்களை வாங்கி இருக்கின்றனர்.
இதை குடித்த சற்று நேரத்தில் அவர்கள் இருவருக்கும் வாந்தி, பேதி, மயக்கம் போன்ற ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் அருந்திய மதுபானமானது காலாவதியாகி இருக்கலாம் என்று தெரிவித்து இருக்கின்றனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் குடித்த பீரின் டின்களை ஆய்வு செய்யும் போது அவை ஜனவரி மாதமே காலாவதி ஆகி இருப்பது தெரியவந்துள்ளது. அந்த இளைஞர்களின் உறவினர்கள் இதுபற்றி சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் கேட்டபோது அவர்கள் சரிவர பதில் கொடுக்கவில்லை.
இதனை அடுத்து அவர்கள் சீர்காழி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடையினரின் இந்த அலட்சியம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.