#Breaking: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்; பாஜக நிர்வாகி கைது.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் பகுதியில், பெஞ்சல் புயல் பாதிப்புகளை அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு செய்யச் சென்றார். அப்போது, அமைச்சர் பொன்முடியின் கார் இருவேல்பட்டு கிராம மக்களால் மறிக்கப்ட்டது.
மேலும், அமைச்சரிடம் வாக்குவாதம் செய்து, தங்களுக்கு 2 நாட்களாக உணவு கூட வழங்கப்படவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர். ஒருகட்டத்தில் அமைச்சரை மக்கள் முற்றுகையிட்டு இருந்தபோது, அவரின் மீது சேறு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: மனைவியின் தலையில் கல்லைப்போட்டு பயங்கரம்; விழுப்புரத்தில் அதிர்ச்சி செயல்.!
சேறு வீசி தாக்குதல்
உணவு, குடிநீர் என அடிப்படை வசதிகள் வெள்ளம் வடிந்த பின்னரும் கிடைக்காத விரக்தியில் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. அமைச்சரின் மீது தாக்குதல் நடத்தியது அரசியல் பின்புலம் கொண்டவர்கள் என்பது பின்னாளில் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அமைச்சரின் மீது சேறு வீசியதாக பாஜக நிர்வாகி ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டள்ளார். சம்பவம் நடந்து பல வாரங்களுக்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவாக இருக்கும் மற்றொரு பாஜக நிர்வாகி விஜயதரணி தேடப்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, திருமண மிரட்டல்.. விஜய் கட்சி நிர்வாகியால் மாணவி தற்கொலை செய்து மரணம்.!