மனைவியின் தலையில் கல்லைப்போட்டு பயங்கரம்; விழுப்புரத்தில் அதிர்ச்சி செயல்.!



in Viluppuram a Wife Killed by Husband 

 

உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் கணவர் கல்லைப்போட்டு கொலை செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம், வாய்க்கால் மேட்டுத்தெரு பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 47). இவரின் மனைவி உமா (வயது 42). 

இதையும் படிங்க: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, திருமண மிரட்டல்.. விஜய் கட்சி நிர்வாகியால் மாணவி தற்கொலை செய்து மரணம்.!

இவர்கள் இருவரும் செங்கல் சூலை ஒன்றில் கூலித் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். தம்பதிகளுக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகின்றது. 

இருவருக்கும் மனோ என்ற 21 வயது மகன், வினோதினி என்ற 19 வயது மகள் இருக்கின்றனர். இதனிடையே, மணிகண்டன் - உமா இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. 

Viluppuram

தலையில் குழவிக்கல் போட்டு கொலை

கடந்த வெள்ளிக்கிழமை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது, அவர்களை அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்துள்ளனர். சண்டைக்கு பின் தம்பதிகள் இரவில் உறங்கியுள்ளனர். 

அப்போது, இரவு 11 மணியளவில் மனைவி உமாவின் தலையில் மணிகண்டன் குழவிக்கல்லை தூக்கி போட்டுள்ளார். இதனால் உமா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். 

இதையும் படிங்க: டூவீலர் - வேன் மோதி நேர்ந்த சோகம்; வாகன ஓட்டி, லிப்ட் கேட்டு பயணித்த திருநங்கை பலி.!