மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்காக, பெற்ற குழந்தைகளை கொலை செய்த கொடூர தாய்!.
குன்றத்தூர் அருகே குழந்தைகளை கொன்ற அபிராமியை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.
கொலை செய்துவிட்டு தப்பியோடிய அபிராமியை போலீசார் தேடிவந்தனர். இதனையடுத்து கள்ளக்காதலன் சுந்தரத்தை பிடித்த போலீசார் அவரை வைத்தே அபிராமியை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அபிராமியின் கணவர் அடிக்கடி வேலை விஷயமாக வெளியில் சென்றுவிடுவதால். கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்டுவந்துள்ளார். இதனால் பிரியாணி கடையில் வேலைபார்க்கும் சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. உல்லாசமாக இருப்பதற்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால் குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அபிராமியை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.