#Breaking: நாம் தமிழர் மா.செ கட்சியில் இருந்து விலகல்; செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் ஆதரவாளர்கள்.. அடிதடி., மோதலால் பரபரப்பு.!



NTK Tirupattur Vaniyambadi Fight 

 

கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும், தங்களின் சொந்த காரணங்கள் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அவ்வாறு கட்சியில் இருந்து விலகுவார்கள், சீமானுக்கு எதிராக குரலை பதிவு செய்து பதவி விலகுகின்றனர். இதனால் தொடர் பதற்ற சூழ்நிலை அக்கட்சியினரிடையே உண்டாகி இருக்கிறது.

திருப்பத்தூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயலாளராக இருப்பவர் தேவேந்திரன். இவர் உட்பட 10 க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள், தங்களை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

இதையும் படிங்க: #Breaking: "ஆடம்பர பிரத்தியேக நாற்காலி" - நா.த.க நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்.! அடுத்த அதிர்ச்சி.!

சீமான் குறித்து பேசாதே - ஆவேசம்

அப்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆதரவாளர்கள் சிலர், தேவேந்திரனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும், நீங்கள் கட்சியில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். அதனைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதே நேரத்தில், சீமான் குறித்து அவதூறாக பேசக்கூடாது. 

விலகல்

அதிருப்தியால் :சீமானுக்கு எதிராக செய்தியாளர்கள் சந்திப்பு ஏதும் நடைபெற்றதால் தேடிச்சென்று அடிப்போம்" என அங்கு மிரட்டல் விடுத்தது பதிலுக்கு பதில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தேவேந்திரன் 2014ல் இருந்து நாம் தமிழர் கட்சிக்காக உழைத்து வரும் தேவேந்திரன், தனது சொந்த அதிருப்தி காரணமாக கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.  

தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி காவல்துறையினர், இருதரப்பையும் அமைதிப்படுத்தினார். மேலும், சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "அந்தப்புர மகளிர் சேவை., அடிவருடி" - கழுவி ஊதிய நடிகை கஸ்தூரி., பரபரப்பு பேச்சு.! காரணம் என்ன?..