#Breaking: "ஆடம்பர பிரத்தியேக நாற்காலி" - நா.த.க நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்.! அடுத்த அதிர்ச்சி.!



NTK Member Abinaya POnnivalavan Resign from party 

 

கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது அடுத்தடுத்த குற்றசாட்டுகளை முன்வைத்து கட்சிப்பொறுப்புகளில் இருந்து தாமாக விலகி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட நா.த.க நிர்வாகி அபிநயா பொன்னிவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் கட்சியின் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் நிர்வாகி அபிநயா

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், "கட்சி விலகல்‌ கடிதம்‌.. நான்‌ கடந்த 4 ஆண்டுகளாக நாம்‌ தமிழர்‌ கட்சியில்‌ பயணிக்கிறேன்‌. படிக்காத நான்‌ மேடை பேச்சாளராக எண்ணி முதன்முதலாக விழுப்புரம்‌ பொதுக்கூட்டத்தில்‌ பேச முயற்சி செய்தேன்‌ முடியவில்லை...

இதையும் படிங்க: நா.த.க-வில் அடுத்த சம்பவம்.. பதவி விலகினார் மா.செ.. அதிர்ச்சியில் சீமான்.!

மனஉளைச்சலால் முடிவு

பெண்களுக்கு 50% இடம்‌ என்ற கட்சியில்‌... துணிவுள்ள, கொள்கை பிடிப்புள்ள எனக்கு வேட்பாளராக வாய்ப்பு தரப்படவில்லை. தொகுதி பொறுப்பில்‌ உள்ள என்‌ கணவரிடம்‌ சீமான்‌ அவர்கள்‌ "நான்‌ பொதுக்கூட்டத்தில்‌ அமர்வதற்காக ஆடம்பரமான பிரத்தியேக
நாற்காலி வாங்க சொத்தை விற்று 5 லட்சம்‌ தர வேண்டும்‌" என்று கட்டாயப்படுத்தியதால்‌ மிகுந்த மன உளைச்சல்‌ அடைந்தேன்‌.

இதனால்‌ நான்‌ கட்சியிலிருந்து விலகுகிறேன்‌. இதுவரை என்னுடன்‌ பயணித்த உறவுகளுக்கு நன்றி" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரும் நா.த.கவில் இருந்து அபிநயா விலகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சீமான் தலைமையிலான கட்சிக்கு அடுத்தடுத்த புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளைஞரின் ஆணுறுப்பை நசுக்கி சித்ரவதை; நா.த.க பிரமுகர் உட்பட 6 பேர் அதிர்ச்சி செயல்.!