"அந்தப்புர மகளிர் சேவை., அடிவருடி" - கழுவி ஊதிய நடிகை கஸ்தூரி., பரபரப்பு பேச்சு.! காரணம் என்ன?..



actress-kasthuri-shankar-latest-speech-3-nov-2024

 

4 காளைமாடு கதை தான் இந்து சமூகத்தில் நடக்கிறது. சமுதாய ரீதியாக அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், திராவிடம் - பெரியாரியம் பெயரில் பிரிவினை பேசும் நபர்களுக்கு வேலையில்லாமல் போகும் என கஸ்தூரி விமர்சித்தார்.

 

கடவுள் மறுப்பு கொள்கை

சென்னையில் பிராமணர் பாதுகாப்பு & அவர்களுக்கு எதிரான அவதூறுகளை கண்டித்து அனைத்து சமூகம் சார்பில் போராட்டம் நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, "அடுத்த தலைமுறையில் யார் இறந்தாலும், கருமாதி செய்வதற்கு கூட அய்யர் இருப்பாரா? என கவலை வந்துவிட்டது. இது ஒட்டுமொத்த இந்து மதத்தின் கவலையாக இருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை இன்றியமையாத அங்கம் பெற்ற குலத்தை ஏன் ஒழிகிறார்கள் என்றால், திராவிடியம் பேசுபவர்களுக்கு கடவுள் மறுப்பு முதல் கொள்கை. அதனால் தான் பிராமண எதிர்பை முன்னெடுக்கிறார்கள். 

இதையும் படிங்க: வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் டார்கெட்? இளைஞரின் அதிர்ச்சி செயல்.. பெண்களே உஷார்.!

4 காளைமாடு கதை

கடவுள் இல்லை என யார் சொன்னால் நம்புவார்கள்? கடவுள் இருக்கிறார்கள் என பயபக்தியுடன் இருந்தால் யார் அதற்கான நடைமுறையை பின்பற்றினால் யார் நம்புவார்கள். அதனால் தான் பிராமணர்களை ஒழிக்கிறார்கள். பொய்யான பல கதைகளைச் சொல்லி, இவன் அவனை அடிமைப்படுத்தினான், அவன் இவனை அடிமைப்படுத்தினான் என கட்டுக்கதை கட்டுகிறார்கள். 4 காளைமாடு கதை தான் இது. 4 சமுதாயம் ஒற்றுமையாக இருந்தால் பிரச்சனை இல்லை. 

Kasthuri Shankar

பொய்கள் பரப்புரை

ஒவ்வொரு இடத்திலும் ஒடுக்குனான் என கதைகளை அளந்துவிட்டு பிரிவினையை உண்டாக்கி இருக்கின்றனர். வில்லையாக இருக்கிறான் பொய்சொல்ல மாட்டான் என சொன்னது அய்யர், அய்யங்கார்களைத்தான். இன்றளவில் அய்யரும் பொய்சொல்ல, இறைச்சி சாப்பிடுவோம் என்கிறார்கள். இவ்வாறான செயலை செய்யபவர்கள் பிராமணர்களை இழிவுபடுத்துபவர்களுக்கு துருப்புசீட்டு எடுத்துக்கொடுக்கிறீர்கள். அவ்வுளவே. பாப்பான், நூலிப்பான், பிராமண அடிவருடி, சொம்பு என சொல்வதாக கூறுகிறார்கள். என்னை எதிர்ப்பு கூட்டம் நேரடியாக ஒரேயொரு வார்த்தையை கூறித்தான் விமர்சிக்கும். 

திராவிடியாதனத்தை விட கொச்சையான வார்த்தை இருக்கா?

பெண், நடிகை என்பதால் அதற்கென சில வார்த்தை இருக்கிறது. அதனையே அவர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் வார்த்தை திராவிடியாதனத்தை விட கொச்சையான வார்த்தை இல்லை. அப்படியே அவர்கள் சொன்னாலும், அதுகூட எனது சுய உழைப்பை ஏற்படுத்தி உழைக்கிறேன் என சொல்லுவேன். உன்னைப்போல பிளவுபடுத்தி, அநியாயமாக, அக்கிரமமான செயலை நான் செய்யவில்லை. அனைத்து சமூகத்தையும் ஒற்றுமையாக இந்த மேடையில் பார்ப்பது மகிழ்ச்சி. அதற்கான செயலை முன்னெடுத்த அர்ஜுன் சம்பத்துக்கு நன்றிகள். 

இணைந்துகொண்டனர்

ஆரிய வந்தேறி யார்?. சங்க இலக்கிய காலங்களில் இருந்து தமிழர்கள் ஆன்மீக பணிகளில் ஈடுபடுகிறார்கள், கோவிலில் தெய்வத்துக்கு சேவை செய்கிறார்கள். சத்திரியர்கள் பட்டியலில் வன்னியர்கள், தேவர்கள் இணைந்துகொண்டார்களோ, வைசியர்கள் பட்டியலில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்துகொண்டார்களோ, அதேபோல கோவில் பணிகளை செய்யும் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், அய்யங்கார், சைவப்பிள்ளை, பண்டார்கள் ஆகியோர் பிராமணர்களாக இணைந்துகொண்டனர்.

தமிழர் இல்லை என சொல்ல நீ யார்?

300 ஆண்டுகளுக்கு முன் ராஜாவுக்கு, கூட சேர்த்துக்கொண்டு அந்தப்புர மகளிர் சேவைக்கு வந்தவர்கள், மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள், தெலுங்கு பேசுவார்கள் இன்று தமிழர் என் இனம் என சொல்லும்போது, எப்போவோ வந்தவர்களை பிராமணர்களை தமிழர் இல்லை என சொல்வதற்கு நீங்கள் (எதிர்ப்பு பேசுபவர்களை நடிகை குறிப்பிட்டார்) யார். அதனால்தானே இன்று வரை தமிழர் முன்னேற்றம் கழகம் என பெயர் வைக்கவில்லை. தெலுங்கு பேசுபவர்கள் இங்கு அமைச்சர்களாக இருக்கிறார்கள் என ஆந்திராவில் சொன்னால், ரெட்டியா? என பெருமை கொள்கிறார்கள். 

தமிழர்களின் உரிமை தெலுங்கர்களுக்கு வழங்கப்படுகிறது

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என திருமாவளவன் கூறியது தெரிந்தோ, தெரியாததோ இல்லை. ஆதிகுடிகளான பறையர்களுக்கு மட்டும் தான் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு இல்லை, தெலுங்கர்களுக்கு கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் எதையும் செய்யட்டும். நம்மிடம் இருந்து அவர்கள் உரிமை, பிழைப்புகளை பிடுங்காமல் இருக்க வேண்டும்" என பேசினார்.

 

இதையும் படிங்க: பிரியாணி கடை தகராறு; காவலரை நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய போதை வழக்கறிஞர்..!