பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
"அம்மாவ தப்பா பேசுவியா நீ..' 75 வயது முதியவர் கொடூர கொலை.!! பரபரப்பு பின்னணி.!!
பழனி அருகே தாயை இழிவாக பேசியதால் 75 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப பிரச்சனை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். 75 வயதான இவர் தனது மகள் பார்வதியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் மாரியப்பன் குடும்பத்திற்கும் அவரது வீட்டருகே வசித்து வரும் உறவினரான மாசிலாமணி என்பவரது குடும்பத்திற்குமிடயே பிரச்சனை இருந்து வந்திருக்கிறது.
வீடு புகுந்து முதியவர் படுகொலை
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கடைவீதிக்கு சென்ற மாசிலாமணியின் தாயாரை முதியவர் மாரியப்பன் அநாகரீகமாக பேசியதாக தெரிகிறது. இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த மாசிலாமணி, மாரியப்பனின் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்தார். இதனை தடுக்க வந்த மாரியப்பனின் மகளான பார்வதிக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இதையும் படிங்க: "ஒருத்தன் போதாதா உனக்கு.." கள்ள காதலை கண்டித்த மாமியார்.!! தூக்கில் தொங்க விட்ட மருமகள்.!!
கொலையாளி கைது
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த மாரியப்பனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பார்வதியை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி மாசிலாமணியை கைது செய்த காவல்துறை அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்... நடுரோட்டில் மாணவிக்கு பாலியல் தொல்லை.!! போலீஸிடம் சிக்கிய குற்றவாளி.!!