"ஒருத்தன் போதாதா உனக்கு.." கள்ள காதலை கண்டித்த மாமியார்.!! தூக்கில் தொங்க விட்ட மருமகள்.!!



woman-murdered-her-mother-in-law-for-condemning-her-ill

செங்கல்பட்டு அருகே கள்ளக்காதலில் இருந்ததை கண்டித்ததால் மாமியார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் சரணடைந்த 3 பேரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மருமகளின் கள்ளக்காதல்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் அமுல்(38). இவருக்கு திருமணமான நிலையில் தனது கணவன் மற்றும் மாமியார் லட்சுமி(58) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அமுலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சரவணன்(42) என்ற நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. மருமகளின் கள்ளத்தொடர்பை லட்சுமி கண்டித்ததோடு அவரைத் திட்டியதாகவும் தெரிகிறது.

tamilnadu

தற்கொலை நாடகம்

இந்நிலையில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதியன்று லட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மருமகள் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்... நடுரோட்டில் மாணவிக்கு பாலியல் தொல்லை.!! போலீஸிடம் சிக்கிய குற்றவாளி.!!

மாமியார் அடித்து படுகொலை

இந்நிலையில் லட்சுமி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது மருமகள் அமுல், தோழி பாரதி மற்றும் அமுலின் கள்ளக்காதலன் சரவணன் ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். மேலும் சரவணன் மற்றும் அமுலின் கள்ளக்காதலை கண்டித்ததால் லட்சுமியை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: திருச்சியில் பரபரப்பு... டாஸ்மாக் பாரில் அடிதடி.!! ரௌடியை தாக்கிய இருவர் கைது.!!