புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சென்னையில் பயங்கரம்... நடுரோட்டில் மாணவிக்கு பாலியல் தொல்லை.!! போலீஸிடம் சிக்கிய குற்றவாளி.!!
சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் சிசிடிவி காட்சிகளின் மூலம் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையில் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை
கடந்த ஐந்தாம் தேதி சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சாலையில் கல்லூரி மாணவி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற மர்ம நபர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து தனது தந்தையிடம் மாணவி தெரிவித்திருக்கிறார்.
காவல்துறையில் புகார்
இதனையடுத்து மாணவியின் தந்தை, பாலியல் அத்துமீறல் குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: திருச்சியில் பரபரப்பு... டாஸ்மாக் பாரில் அடிதடி.!! ரௌடியை தாக்கிய இருவர் கைது.!!
சிக்கிய குற்றவாளி
இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் அடையாளம் கண்டனர். இதன் பிறகு அந்த நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: "செல்போன் பாக்காதனு சொன்னது ஒரு குத்தமா.." இளம் பெண் எடுத்த விபரீத முடிவு.!! காவல் துறை விசாரணை.!!