ஊட்டி: யாருப்பா பேக்கரில.. அண்ணனுக்கு பசி, சாப்பிட்டுக்கிறேன் டா தம்பி.. பேக்கரியில் வெளுத்துவாங்கிய கரடி.!



Ooty Bear Taste Bakery Sweets 

 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் மலைப்பிரதேசம் ஆகும். தேயிலை தோட்டங்கள், படகு சவாரி, மலைக்கண்காட்சி, வனவிலங்குகளின் நேரடி காட்சி என ஊட்டி பயணம் கொண்டாட்டமாக இருக்கும். அங்குள்ள ஜீதோஷ்ணநிலையும் பலருக்கும் பிடிக்கும்.

வனப்பகுதியில் அமைந்துள்ள ஊட்டியில், வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது இயல்பானது .அவ்வப்போது, கரடி, யானை, சிறுத்தை போன்றவை ஊருக்குள்ளும் வரும். ஒருசில நேரம் இதனால் மனித உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இதையும் படிங்க: ஜாகிர் உசேனின் மகனையும் கொலை செய்ய சதித்திட்டம்? நோட்டமிட்ட நபர்.. மகன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.!

இந்நிலையில், ஊட்டியில் உள்ள புதுமந்து பகுதியில் பேக்கரி ஒன்றில் நுழைந்த கரடி, வடிவேலு காமெடி பாணியில், பசியால் பேக்கரியில் இருந்த பொருட்களை ருசிபார்த்துச் சென்றது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோ நன்றிசன் தொலைக்காட்சி

 

இதையும் படிங்க: செந்தூர் கடலில் ஒதுங்கும் முள்ளெலிகள்.. பக்தர்கள் வேதனை.. உடனடி நடவடிக்கை எடுத்த நிர்வாகம்.!