நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
செந்தூர் கடலில் ஒதுங்கும் முள்ளெலிகள்.. பக்தர்கள் வேதனை.. உடனடி நடவடிக்கை எடுத்த நிர்வாகம்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில், கடற்கரையோரம் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும், முருகனுக்கு விசேஷமான நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் திருச்செந்தூரில் அலைமோதும்.
முள்ளெலிகள்
இதனிடையே, கோவில் கடற்கரையில் சில நாட்களாகவே முள்ளெலிகள் கரை ஒதுங்கி வருகிறது. இதனால் கடலில் இறங்கி குளிக்கும் பக்தர்களின் உடலில் முள்ளெலிகளின் முட்கள் குத்தி காயம் ஏற்படுகின்றன. இந்த விஷயம் கோவில் நிர்வாகத்தின் கவனத்திற்கும் சென்றுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி: பீடை குடியால் குடும்பமே காலி.. கணவரை கொன்ற மனைவி.. தவிக்கும் 2 வயது குழந்தை..!
நிர்வாகம் நடவடிக்கை
இதனையடுத்து, பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, கரையில் ஒதுங்கும் முள்ளெலிகளை நீக்க நிர்வாகம் சார்பில் சிறப்பு பணியாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கடற்கரையோரம் வரும் முள்ளெலிகளை பாதுகாப்பாக அகற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை: காதலிக்க சொல்லி தொல்லை.. கல்லூரி மாணவியின் தம்பியை கடத்தி எக்சேஞ் டீலிங்.. இளைஞர்கள் கைது..!