"வீடியோ வரலைனா வீடு புகுந்து வெட்டுவேன்..." 14 வயது மாணவிக்கு மிரட்டல்.!! 5 இளைஞர்கள் கைது.!!



police-arrested-five-youths-for-blackmailing-a-school-g

14 வயது மாணவியின் ஆபாச வீடியோக்களையும் புகைப்படங்களையும் நண்பர்களிடம் பகிர்ந்தது தொடர்பாக 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

பள்ளி மாணவியுடன் பழக்கம்

திருப்பத்துறை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியுடன் செல்போனில் தொடர்ச்சியாக பேசி வந்திருக்கிறார். இதனால் அவர்களது நட்பு நாளடைவில் நெருக்கமாகி இருக்கிறது. இந்நிலையில் அந்த இளைஞரின் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. திடீரென அந்த மாணவியிடம் நிர்வாணபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கேட்டு மிரட்டியிருக்கிறார் அந்த நபர்.

tamilnadu

வீடு புகுந்து வெட்டுவேன் என மிரட்டல்

மேலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பவில்லையென்றால் வீடு புகுந்து அனைவரையும் வெட்டி விடுவேன் என மிரட்டியிருக்கிறார். இதனால் அந்த மாணவியும் அவர் கேட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை செல்போன் மூலம் அனுப்பி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர், மாணவியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது நண்பர்களுடன் பகிர்ந்ததாக தெரிகிறது. இதனை வைத்து அந்த இளைஞர்களும் மாணவியை மிரட்டி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: தனிமையில் உல்லாசம்... கள்ள உறவில் வாக்குவாதம்.!! இளம் பெண் கொடூர கொலை.!!

போக்சோ வழக்கு

இதன் பிறகு மாணவி தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அவர்களது புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மாணவியுடன் பழகிய இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேரை கைது செய்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... 14 வயது மாணவியை கர்ப்பமாக்கிய உறவினர்.!! காவல்துறை விசாரணை.!!