திருச்சியில் பரபரப்பு... கட்டுகட்டாக பணம், போதை மாத்திரைகள்.!! 7 பேர் கும்பல் கைது.!!



trichy-police-arrested-7-members-gang-with-narcotics-pi

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு வேறு யாருடனும் தொடர்பிருக்கிறதா.? என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்

சமீப காலமாக திருச்சியில் போதை பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்து வருகிறது. திருச்சியின் கேகே நகர் பகுதியில் போதை பொருள் விற்பனை நடப்பதாக இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து திருச்சியின் கேகே நகர் பகுதியில் ரோந்து பணிகள் மற்றும் ரகசிய கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வந்தனர்.

tamilnadu

போதை மாத்திரை கும்பல் கைது

இந்நிலையில் திருச்சியில் கேகே நகர் லிங்கநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலிடம் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் அவர்களிடம் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசி போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் போதை மருந்து தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: "வீடியோ வரலைனா வீடு புகுந்து வெட்டுவேன்..." 14 வயது மாணவிக்கு மிரட்டல்.!! 5 இளைஞர்கள் கைது.!!

தீவிர விசாரணை

இதனைத் தொடர்ந்து காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த போதை மாத்திரைகள் மற்றும் பணம் போன்றவையும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பலுக்கு வேறு ஏதேனும் நபர்களுடன் தொடர்பிருக்கிறதா.? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: தனிமையில் உல்லாசம்... கள்ள உறவில் வாக்குவாதம்.!! இளம் பெண் கொடூர கொலை.!!