பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்குள் புகுந்த புது வில்லி... வைரலாகும் ப்ரோமோ வீடியோ...
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த ஆய்வு மையம்.! 2 நாட்களுக்கு உஷார்.!

அதிகமழை
எதிர்பார்த்த அளவைவிட இந்த ஆண்டு அதிகப்படியான பருவ மழை பெய்து தமிழகத்தின் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்ததும் மறக்க முடியாதது.
அதிக பனி
அந்த வகையில் இந்த ஆண்டு பனி பொழிவும் மிக அதிகமாகவே இருந்து வருகிறது. மார்கழி மாதம் முதலே கடும் பனிப்பொழிவு இருந்து வரும் நிலையில், இன்னும் இந்த பனிப்பொழிவு நீடித்து வருகின்றது. சில இடங்களில் ஆங்காங்கே மழை கூட பெய்து வருகின்றது.
இதையும் படிங்க: இன்று இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.! 5 மாவட்டங்களுக்கு அலெர்ட்.!
2 நாட்களில் கனமழை
அந்த வகையில், ஜனவரி 30 ஆம் தேதியான நாளையும், 31ஆம் தேதியான நாளை மறுநாளும் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுபோல, தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் வட தமிழகத்தின் சில பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 30 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!