திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மதியம் 1 மணிவரை 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
மேற்குத்திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நேற்றும்-இன்றும் தமிழ்நாட்டில் பரவலான மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, நேற்று முதல் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் சூறைக்காற்று பலமாக வீசி வருகிறது. மேகமூட்டங்களுடன் மழைக்கான சாதக வாய்ப்புகள் நிலவி வருவதால், மக்கள் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: #JUSTIN: இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள் என்னென்ன? - விபரம் இதோ.!
இடி-மின்னலுடன் மழைக்கான வாய்ப்பு
இந்நிலையில், அடுத்த 2 மணிநேரத்திற்கு, அதாவது மதியம் 1 மணிவரையில் 11 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளுர், காஞ்சிபும், இராணிப்பேட்டை, வேலூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடி-மின்னலுடன் இம்மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!