திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#JUSTIN: இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள் என்னென்ன? - விபரம் இதோ.!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மழைக்கான முன்னறிவிப்பு சென்னை வானிலை ஆய்வு மையத்தால் இன்று காலை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யும் எனினும், தமிழகத்தை பொறுத்தமட்டில் மாநில அளவில் வெப்பநிலை என்பது ஒரு டிகிரி முதல் மூன்று டிகிரி வரை வெப்பத்தை உயரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இதையும் படிங்க: #JustIN: 27 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!