மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொள்ளையடித்த பணத்தில் கள்ளக்காதலியுடன் ஜாலி டூர்; தில்லாலங்கடி கேடியின் பகீர் வாக்குமூலம்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் இரண்டு பேர், கடந்த ஜூன் 14 ம் தேதி நிறுவனத்தின் சார்பில் வசூலான ரூ.12 இலட்சம் பணத்தை வங்கியில் செலுத்த இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தனர்.
இவர்களை இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்த 4 பேர் கும்பல், ரூ.12 இலட்சம் பணத்தையும் கத்தி முனையில் பறித்துச்சென்றது. இந்த விஷயம் தொடர்பான வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் வசித்து வரும் அலெக்ஸ் (வயது 32), சித்தக் அலி (வயது 32) ஆகியோர் முக்கிய குற்றவாளியாக கவனிக்கப்பட்டனர்.
திருட்டுப்பணத்தில் திருட்டு கல்யாணம்
இவர்களை நீதிமன்ற காவலில் எடுத்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று அம்பலமானது. அதாவது, அலெக்ஸ்க்கு தெரிந்த நண்பர் சம்பந்தப்பட்ட வங்கியில் பணியாற்றி வரும் நிலையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் அதிக தொகையை கொண்டு வரும்போது பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நம்ம தமிழ்நாட்டில்.., ஏலியனுக்கு கோவில் கட்டி, மணியடித்து பூஜை செய்து வழிபாடு.!
கேரளா டூர்
கொள்ளை சம்பவம் நடந்ததும் பணம் பங்குபோடப்பட்டுள்ளது. இந்த பணத்தை எடுத்துக்கொண்ட அலெக்ஸ், வேறொருவரின் மனைவியை, அவரின் கணவருக்கே தெரியாமல் திருமணம் செய்து கேரளாவுக்கு இன்பசுற்றுலாவுக்கு அழைத்து சென்றுள்ளார். அலெக்ஸ் மீது 10 க்கும் மேற்பட்ட கொலை, வழிப்பறி உட்பட பிற வழக்குகள் இருக்கின்றன.
இதனால் தலைமறைவான 2 பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வக்கீல் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு கொலை.. இதுதான் காரணமா?.. நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்.!