மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வக்கீல் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு கொலை.. இதுதான் காரணமா?.. நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்.!
கோயம்புத்தூர் மாவட்டம், ரத்தினபுரி, விஸ்வநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் உதயகுமார் (வயது 48).இவர் வக்கீல் ஆவார். நேற்று மதியம் செட்டிபாளையம் பகுதியில் சென்றுகொண்டு இருந்த உதயகுமாரை, செட்டிபாளையம் பகுதியில் 4 பேர் கும்பல் மறித்து பேசிக்கொண்டு இருந்தது.
அச்சமயம் இவர்களுக்கு இடையே வாக்குவாதமானது எழவே, உதயகுமாரை மறைவான இடத்திற்கு கடத்திச்சென்று அரிவாள் உட்பட ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதனால் இரத்த வெள்ளத்தில் மயங்கிய உதயகுமாரை, அந்த கும்பல் மர்ம உறுப்பை அறுத்து, சிதைத்து கொலை செய்தது.
ஆணுறுப்பை அறுத்துக் கொலை
கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று உதயகுமாரின் உடலை மீட்டனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். முதற்கட்ட தகவலின்படி, வக்கீல் உதயகுமார் விஸ்வநாதபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரின் மனைவி நித்தியவள்ளி, தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க: தோல் நோயால் பாதிக்கப்பட்ட கணவர்; பொறுமை தாங்காமல் மனைவி செய்த காரியம்.! சென்னையில் அதிர்ச்சி.!
உதயகுமாரின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட காரணத்தால் அவர் பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க: போதையில் தகராறு; இளைஞரின் தலையை நசுக்கிக்கொன்ற பயங்கரம்.. மதுரையில் அதிர்ச்சி.!