வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
மகனை இரும்பு கம்பியால் அடித்தே கொன்ற தந்தை; சேலத்தில் பரபரப்பு சம்பவம்.. காரணம் என்ன?
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, கவுண்டம்பட்டி, சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் மாதேஸ்வரன். இவர் விசைத்தறி தொழிலாளி ஆவார். இவரின் மகன் சீனிவாசன், சண்முகம், மலர்க்கொடி.
சண்முகம், மலர்க்கொடி தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். சீனிவாசனின் மனைவி, அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இதனிடையே, நேற்று இரவு நேரத்தில் தந்தை - மகன் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த மாதேஸ்வரன், உறங்கிக்கொண்டிருந்த சீனிவாசனை கம்பியால் தாக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: 17 வயதில் பப்பி லவ்.. காதல் தகராறில் 18 வயது கல்லூரி மாணவர் குத்திக்கொலை.!
ஆத்திரத்தில் மகன் கொலை
இந்த சம்பவத்தில் சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விசாரணையில், பக்கத்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறார்களிடம் போதையில் சீனிவாசன் தகராறு செய்துள்ளார்.
இதில் மாதேஸ்வரன் மகனை கண்டிக்க, தந்தை என்றும் பாராமல் சீனிவாசன் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த மாதேஸ்வரன் மகனை கொலை செய்தது அம்பலமானது.
இதையும் படிங்க: சென்னை: கணவனுக்கு செருப்படி.. கள்ளகாதலருடன் வந்த மனைவியை நடுரோட்டில் குத்திக்கொன்ற கணவர்.!