வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
17 வயதில் பப்பி லவ்.. காதல் தகராறில் 18 வயது கல்லூரி மாணவர் குத்திக்கொலை.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, திருத்தங்கல், எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் ஜெகநாதன். இவரின் மனைவி வீரலட்சுமி. தம்பதிகளுக்கு வீரமாணிக்கம் என்ற 18 வயதுடைய மகன் இருக்கிறார். தம்பதிகள் துப்புரவு தொழிலாளர்களாக வேலை பார்த்து வரும் நிலையில், வீரமாணிக்கம் சாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதல் ஆண்டு பயின்று வருகிறார்.
சிறுவன் குத்திக்கொலை
இவர் அதே பகுதியில் வசித்து வந்த நண்பர் ஆனந்த் (வயது 17) என்பவரின் சித்தி மகளான 14 வயது சிறுமியை ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் குறித்து வீரமாணிக்கம் - ஆனந்த் இடையே தகராறு நடந்துள்ளது. இந்த விசயத்திற்கு சமாதானம் பேச இருவரும் கண்ணகி காலனி பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: சிவகாசி: நீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து சோகம்; தாய்-மகன் பரிதாப பலி.! மழையால் நடந்த சோகம்.!
சிகிச்சை பலனின்றி சோகம்
அப்போது, ஆனந்த், வீரமாணிக்கத்தின் நெஞ்சு, இடுப்பு பகுதியில் கத்தியால் குத்தி தப்பி சென்றுவிட்டார். இந்த விஷயத்தில் படுகாயமடைந்த வீரமாணிக்கம், முதலுதவிக்கு பின்னர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ஆனந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மகளுக்கு உணவு கொடுத்த 10 நிமிடத்தில் தலை நசுங்கி உயிரிழந்த தந்தை; வழக்கறிஞருக்கு லாரியில் வந்த எமன்.!