#Breaking: "தமிழகத்திற்கு உறுதுணையாக இருப்போம்" - கேரளா முதல்வர் பினராயி விஜயன்.! 



  Kerala CM Pinarayi Vijayan Says Kerala Govt Help to TN Govt 

தமிழ்நாட்டுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக கேரளா மாநில அரசு அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெஞ்சல் புயலாக வலுப்பெற்று புதுச்சேரியை மையமாக வைத்து கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபின், மழைகொடுக்கும் மேகங்கள் அதிகம் சூழந்த விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடும் மழை பெய்தது. 

இதனால் தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சாத்தனூர் அணையில் 52 ஆண்டுகளுக்கு பின்னர் உச்சபட்ச அளவில் நீர் வெளியேற்றப்பட்ட காரணத்தால், கடுமையான வெள்ளம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது. பல கிராமங்கள், முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.

இதையும் படிங்க: #Big Breaking: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு?.. பொதுமக்கள் ஆவேசம்.. விழுப்புரத்தில் பரபரப்பு.!

Tn govt

வெள்ள பாதிப்புகள்

வெள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 20 க்கும் மேற்பட்டோர் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். சேதம் தொடர்பாக கணக்கிட மத்திய குழு தமிழகம் விரைவில் வருகிறது.

இந்நிலையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாட்டுக்கு உதவ தயார் என அறிவித்துள்ளார். மேலும், அனைத்து வகையிலும் உதவி செய்ய கேரளா மாநில அரசு உறுதுணையாக இருக்கும் என பினராயி விஜயன் உறுதியை அளித்துள்ளார்.

இதையும் படிங்க: #Breaking: சாத்தனூர் அணை திறப்பு விவகாரம்; எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் மறுப்பு.!