"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
சேலம்: ஏற்காடு மலைப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல 3 நாட்களுக்கு பின் அனுமதி.!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, சுற்றுலாவுக்கு பிரதானமான பகுதியாக கவனிக்கப்படுகிறது. தினமும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் பலரும் வந்து செல்வார்கள்.
மழை காரணமாக போக்குவரத்து துண்டிப்பு
இதனிடையே, கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக, சாலைகளில் மழைநீர் ஓடி போக்குவரத்து தடைபட்டது. பல இடங்களில் சாலைகள் ஆங்காங்கே அடித்து செல்லப்பட்டது. மண்சரிவு ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிங்க: #Breaking: "தமிழகத்திற்கு உறுதுணையாக இருப்போம்" - கேரளா முதல்வர் பினராயி விஜயன்.!
வாகனங்கள் செல்ல அனுமதி
இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல், சேலத்தில் இருந்து ஏற்காடு மலைப்பகுதிக்கு வாகனம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இலகுரக வாகனங்கள் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 நாட்களுக்கு பின்னர் சேலத்தில் இருந்து ஏற்காடு மலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Big Breaking: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு?.. பொதுமக்கள் ஆவேசம்.. விழுப்புரத்தில் பரபரப்பு.!