திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உயிரிழந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா; பெற்ற தாயின் நெகிழ்ச்சி செயல்.!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி பாலகிருஷ்ணன். இவரின் மனைவி ராக்கு. இந்த தம்பதிக்கு பாண்டிச்செல்வி என்ற மகள் இருந்தார். ஒரே ஒரு மகள் என்பதால் சிறுவயதில் இருந்து ஆசை ஆசையாக அவரை வளர்த்து வந்துள்ளனர்.
மகளின் ஆசை
அலங்காரம் என்றால் மிகவும் பிரியம் கொண்ட பாண்டிச்செல்வி, தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டு பூப்புனித நீராட்டு விழாவுக்கு செல்லும் போது தாயாரிடம் தானும் பூப்பெய்தும்போது பிரமாண்டமாக விசேஷத்தை நடத்த வேண்டும் என்று அவ்வப்போது கூறிவந்துள்ளார்.
இதையும் படிங்க: ரோட்டோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது திடீர் ஆசிட் வீச்சு.! அதிர்ந்த சென்னை.! நடந்தது என்ன??
உயிரிழந்த சிறுமி
இதனிடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு எட்டு வயது இருக்கும் போது உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்தார். தற்போது அவர் உயிருடன் இருந்தால் 11 வயதாகும் என்ற நிலையில், தனது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழாவை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.
பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்
இதற்காக மகளின் உருவத்தில் கட்டவுட் ஒன்றை பட்டு சேலை மற்றும் தங்க நகை போன்ற ஆபரணங்களுடன் இருக்குமாறு தயார் செய்து, பின் உறவினர்கள் முன் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. பெற்றோரின் இந்த நெகழ்ச்சி செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இயற்கை உபாதையை கழிக்க சென்ற 2 இளைஞர்கள் துடிதுடித்து மரணம்.! மின்வேலியில் சிக்கி பயங்கரம்.!!