ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இயற்கை உபாதையை கழிக்க சென்ற 2 இளைஞர்கள் துடிதுடித்து மரணம்.! மின்வேலியில் சிக்கி பயங்கரம்.!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு, வெளியகரம் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் காட்டு பன்றிக்காக மின்வேலி அமைக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
மின்வேலியில் கால் வைத்த இளைஞர்கள்
சம்பவத்தன்று இயற்கை உபாதையை கழிக்க சாய்குமார் (வயது 27), பார்த்தசாரதி (வயது 20) அவ்வழியாக சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக மின்வேலியில் கால் வைத்து இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: #கடலூர்: கலவை இயந்திரத்தில் சிக்கி துண்டான கை; அலறித்துடித்த தொழிலாளி.!
போலீசார் விசாரணை
இதில் மின்சாரம் தாக்கி இருவரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இது தொடர்பாக தற்போது பள்ளிப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத செயல்
காட்டுப்பன்றி நடமாட்டத்தை கட்டுப்படுத்த சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்வேலிகளில் சிக்கி பலரும் மரணமடைவது தொடர்ந்து வருகிறது. இவ்வாறான செயல்கள் தண்டனைக்குரிய குற்றத்திற்கு வழிவகை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேட்டையாடப்படும் பூனைகள்.. உணவகத்தில் இறைச்சிக்காக விற்பனை?.. சென்னையில் பகீர்.!