35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
இலவச பஸ் பாஸ் எப்போ கிடைக்கும்?? அதுவரை இதுவே போதும்.! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வரும் ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் மட்டுமன்றி அரசு கலை கல்லூரிகளும் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கான இலவச பயண அட்டை குறித்து மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கட்டணமில்லா பயண அட்டை
அதில், தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. 2024-25 ஆம் கல்வியாண்டில் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குவதில் உள்ள கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டை, பள்ளி மாண மாணவிகள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம்.
இதையும் படிங்க: #Breaking: 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
அதேபோல், அரசு கலை அறிவியல் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து கட்டணமில்லா பயண அட்டையை இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுரை
தொடர்ந்து பள்ளி நேரங்களில் பேருந்துகள் அனைத்தும் சரியாக இயங்குவதைக் கண்காணிக்க குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் உரிய நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக ஏற்றி இறக்கி செல்லவும் நடத்துநா், ஓட்டுநா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: "நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை" - முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி.!