ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
#Breaking: கமிஷன் அடிப்பதே செந்தில் பாலாஜியின் வேலை; தமிழிசை சௌந்தர்ராஜன் கைது.. ஆவேச பேட்டி.!

தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில், ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடந்தது என குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. ஊழல் விஷயத்துக்கு பொறுப்பேற்று, துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக போராட்டத்தை முன்னெடுத்து வைக்கிறது. இன்று காலை 10 மணியளவில், சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்தது. இதனால் பல மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் அங்கங்கே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அண்ணாமலை கைதுக்கு திட்டம்
சென்னையில் உள்ள தி. நகரில் வசித்து வரும் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் தலைமையில் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அவர் முதலில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டார். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் வீட்டின் முன்பு முன்னதாகவே காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: தினகரன் ஆபிஸை கொளுத்திய திமுக, கருத்து சுதந்திரத்தை பேசலாமா? - தமிழிசை காட்டம்.!
இன்று டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக சார்பில் முற்றுகை போராட்டம் அறிவித்த நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வீடிற்கு முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் ..@DrTamilisai4BJP pic.twitter.com/OEs1mzNswY
— Thamaraikani (@kani_twitz24) March 17, 2025
பாஜகவினர் போர்வீரர்கள்
இந்நிலையில், தனது இல்லத்தில் இருந்தவாறு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்"எந்த துறையை கொடுத்தாலும் கமிஷன் அடிப்பது தான் செந்தில் பாலாஜி வேலை. அவர் கமிஷன் தொகையை எங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்ப்பர். அதுதான் அவரின் வேலை. நாங்கள் என்ன குற்றம் செய்தோம். எங்களின் தொண்டர்கள் போர் வீரர்களை போல கைதாகி வருகிறார்கள். தமிழகத்தில் ஊழல் அனைத்தையும் நாங்கள் வெளிக்கொணருவோம்.
மக்களுடன் துணை நிற்போம். ஊழல் செய்தீர்களா இல்லையா? ஊழலை வெளிக்கொண்டு வந்துவிடும் என பயம் இருக்கிறது. இதனால் காவல்துறையை ஏவி எங்களை கைது செய்கிறார்கள். எங்களுக்கு ஏன் இவ்வுளவு பாதுகாப்பு? நாங்கள் அண்ணாமலை தலைமையில் போராட தயாராகிவிட்டோம்" என பேசினார்.
இறுதியில் போராட்ட களத்திற்கு புறப்பட முயன்ற தமிழிசை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 50 தொண்டர்களுடன் போராட்டத்திற்கு புறப்பட காத்திருந்தவர், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: #Breaking: தொடை நடுங்கி திமுக - அண்ணாமலை கடும் கண்டனம்.. பாய்ச்சல்.!