ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
#Breaking: தினகரன் ஆபிஸை கொளுத்திய திமுக, கருத்து சுதந்திரத்தை பேசலாமா? - தமிழிசை காட்டம்.!

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தை விமர்சனம் செய்து விகடன் நிறுவனம் ஒன்று வெளியிட்ட கார்டூன் மிகப்பெரிய அளவில் வைரலாகியது. இந்த விஷயம் பாஜகவினரிடையே கடும் எதிர்ப்பை சந்தித்த நிலையில், விகடனின் இணையப்பக்கங்கள் முடக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விகடன் பத்திரிகை குழுமம் இதுதொடர்பான தனது எதிர்ப்புகளை பதிவு செய்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், மத்திய அரசுக்கு எதிராக தனது வாதத்தையும் முன்வைத்தார். இதுதொடர்பான அவரின் ட்விட் பதிவில்,
இதையும் படிங்க: நாங்க ரிப்போர்ட் கொடுக்கட்டுமா? முதல்வர் ஸ்டாலின் மீது இயக்குனர் பா. ரஞ்சித் காட்டம்.!
பாசிச பாஜகவுக்கு கண்டனம்
"இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடனின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினகரன் அலுவலகம் எரிப்பு
இந்நிலையில், இப்பதிவுக்கு மேற்கோளிட்டு பதில் சொல்லியுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், "ஒரு கருத்துக்கணிப்பிற்காக... மதுரை.. தினகரன் அலுவலகத்தையே.. எரித்தவர்கள் தான்.. இந்த கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அவல நிலையை கருத்தில் கொண்டு.. முதல்வரின் போஸ்டரில் எதிர்வினை ஆற்றிய.. பாட்டியை.. படம் பிடித்துப் போட்டவரை.. கைது செய்து.. யார் அந்த பாட்டி என்று அவரையும் தேடி.. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு கூட மதிப்பளிக்காதவர்கள்.. கருத்து சுதந்திரத்தை பற்றி.. பேசுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கருத்துக்கணிப்பிற்காக... மதுரை.. தினகரன் அலுவலகத்தையே.. எரித்தவர்கள் தான்.. இந்த கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) February 16, 2025
தமிழகத்தில் உள்ள அவல நிலையை கருத்தில் கொண்டு.. முதல்வரின் போஸ்டரில் எதிர்வினை ஆற்றிய.. பாட்டியை.. படம் பிடித்துப் போட்டவரை.. கைது செய்து.. யார் அந்த… https://t.co/1gGfgxqtEM
இதையும் படிங்க: #Breaking: இரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. தமிழ்நாடு முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!