ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
#Breaking: தொடை நடுங்கி திமுக - அண்ணாமலை கடும் கண்டனம்.. பாய்ச்சல்.!

தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில், ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடந்தது என குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விஷயம் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே டாஸ்மாக்கில் மதுபான பாட்டீலுக்கு கூடுதல் தொகை வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்து வந்த நிலையில், பல்வேறு விஷயங்களில் டாஸ்மாக் நிறுவனம் முறைகேடு செய்து, ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்தை கூறியது.
செந்தில் பாலாஜி துறையில் முறைகேடு
ஏற்கனவே மதுவிலக்கு, மின்சாரம், & ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளியே வந்து மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்றார். இதனிடையே, அவர் சார்ந்த துறையில் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. இதனால் டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று, துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக சார்பில் முறையிடப்பட்டுள்ளது. மேலும், 17 மார்ச் 2025 இன்று, காலை 10 மணியளவில், சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: திமுகவினர் கொழுக்க சுரண்டப்படும் மாநிலத்தின் வளங்கள் - அண்ணாமலை கடும் தாக்கு.!
திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, @BJP4Tamilnadu சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, @BJP4Tamilnadu மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா திருமதி @DrTamilisai4BJP,… pic.twitter.com/em0UUH5sjF
— K.Annamalai (@annamalai_k) March 17, 2025
அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில், பாஜக தலைவர் பதிவு செய்துள்ள எக்ஸ் வலைப்பதிவில், "திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழ்நாடு பாஜக சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா திருமதி தமிழிசை சவுந்தர்ராஜன், மாநிலச் செயலாளர் சகோதரர் திரு வினோஜ் செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
என்ன செய்ய முடியும்?
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது? தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: #Breaking: பொய்யும் புரட்டும் வேளாண் பட்ஜெட்.. அம்புலி மாமா கதை என்னாச்சி? - வேளாண் பட்ஜெட்டுக்கு அண்ணாமலை ஆவேசம்.!