சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
தென்காசி: கள்ளகாதலியுடன் சேர்த்து செய்யக்கூடாத வேலை; தலைமை காவலருக்கு நேர்ந்த சோகம்..!

தொழிலதிபர்கள், செல்வந்தர்களை குறிவைத்து நூதன முறையில் மோசடி செயலில் ஈடுபட்டு வந்த காவலரும், அவரின் கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள வி.கே புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகராஜ் (வயது 41). இவர் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில், தலைமைக்காவலர்க வேலை பார்த்து வருகிறார். ஓசூரை சேர்ந்தவர் வளர்மதி. இவரை மதுரை டிஆர்ஓ என ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சசிகுமாருக்கு (40) அறிமுகம் செய்த முருகராஜ், பட்டா வாங்கி தருவதாக கூறி ரூ.10 இலட்சம் மோசடி செய்துள்ளார்.
இதையும் படிங்க: நகைச்சுவை பாணியில் நாயை மடக்கிய நபர்; வேட்டியை பாய்ந்து கவ்விய நாய்.. நூலிழையில் தப்பிய உயிர்நாடி.!
இந்த விஷயம் தொடர்பாக சசிகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நடந்த விசாரணையைத் தொடர்ந்து முருகராஜ், வளர்மதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.
சொகுசு வாழ்க்கைக்கு ஆசை
அதாவது, முருகராஜின் சொந்த ஊர் வி.கே புத்தூர். இங்குள்ள கலங்கள் கிராமத்தில் வசித்து வந்தவர் வளர்மதி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்னதாக தந்தையுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு சென்றுவிட்டார். பின் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்துசென்றவருக்கு முருகராஜின் அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் கள்ளக்காதல் வயப்பட்டுள்ளனர். பின் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட கள்ளகாதல் ஜோடி, மோசடி செயலில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.
வளர்மதி தன்னை டிஆர்ஓ, மருத்துவர், பொறியாளர், அரசுப் பணியாளர் என பல பெயர்களை கூறி மோசடி செய்து வந்துள்ளார். தனக்கு அறிமுகமாகும் நபர்களிடம் முருகராஜ் தன்னை காவல் ஆய்வாளர் என அறிமுகம் செய்து மொத்தமாக தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என 30 பேரை ஏமாற்றி இருக்கின்றனர்.
சொத்து ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
மோசடி செய்தாலும் அது புகார் அளிக்க வாய்ப்பில்லாத தொழிலதிபர்களை குறிவைத்து மோசடி நடத்தப்பட்டுள்ளது. இதற்காக வளர்மதி பெயரில் புதிய வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ள நிலையில், சில வங்கிக்கணக்கில் வளர்மதி கணவரின் பெயர் சேர்க்க வேண்டிய இடத்தில் முருகராஜின் பெயரை வழங்கி இருக்கிறார். மொத்தமாக இவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 கோடி அளவில் பரிவர்த்தனை நடந்துள்ளது.
இவர்களிடம் இருந்து சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். 30 ஏக்கர் தோட்டம், கண்ணாடி மாளிகை போன்றவையும் வாங்கப்பட்டுள்ளது. தற்போது முருகராஜ் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தென்காசி: காதல் திருமணம் அன்பான கணவன் இருந்தும் கசந்தது.. சகோதரனின் ஆணவ வெறியால் அப்பாவி பலி.!