திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இறுதிச்சடங்கில் நடந்த பிரச்சனையில் முதியவர் அடித்துக்கொலை; எழவு வீட்டில் நடந்த அடுத்த சோகம்.!
நீர்மாலை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் அடித்துக் கொலை செய்ய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், பாறைப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் சமுத்திரமூர்த்தி (வயது 70).இவர் இயற்கை எய்திய நிலையில், உடல் இடுகாட்டுக்கு எடுத்து செல்லப்படுவதை முன்னிட்டு, உறவினர்கள் சார்பில் நீர்மாலைக்கு சொம்பு நீர் எடுக்கச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: தென்காசி: கள்ளகாதலியுடன் சேர்த்து செய்யக்கூடாத வேலை; தலைமை காவலருக்கு நேர்ந்த சோகம்..!
அச்சமயம், அங்கிருந்த உறவினர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டு, இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில், நிகழ்விடத்தில் இருந்த வேலுசாமி (60) என்ற முதியவரின் தலையில் கட்டையால் தாக்குதல் சம்பவம் நடந்தப்பட்டது.
முதியவர் பரிதாப பலி
காயமடைந்தவர் உடனடியாக மீட்கப்பட்டு சங்கரன்கோவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு செல்லும் வழியிலேயே முதியவரின் உயிர் பிரிந்தது.
இதனையடுத்து, மோதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த புளியங்குடி காவல்துறையினர், 10 நபர்களை கைது செய்தனர். மேலும், மேற்படி பிரச்சனை ஏற்படாமல் இருக்க காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இருதரப்பு மோதல் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே பாறைப்பட்டி கிராமத்தில் ஒரே பிரிவை சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் முதியவர் பலி pic.twitter.com/sIGrVzjsvF
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) October 8, 2024
இதையும் படிங்க: நகைச்சுவை பாணியில் நாயை மடக்கிய நபர்; வேட்டியை பாய்ந்து கவ்விய நாய்.. நூலிழையில் தப்பிய உயிர்நாடி.!