திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
மகள்களுக்கு பாலியல் தொல்லை அளித்த 2-வது கணவன்... சரமாரியாக வெட்டி ஆற்றில் வீசிய பெண்..!

மகள்களுக்கு பாலியல் தொல்லை அளித்த இரண்டாவது கணவனை கொன்று ஆற்றில் வீசிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே, மகள்களிடம் பாலியல் தொல்லை அளித்த இரண்டாவது கணவனை கொன்று ஆற்றில் வீசிய பெண்ணை, நான்கு மாதங்களுக்குப் பிறகு காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ரேகா என்பவர், பத்து வருடங்களுக்கு முன்பு தனது கணவர் இறந்ததால், தனது மூன்று மகள்களுடன் திருச்சி மாவட்டதில் உள்ள முசிறிக்கு கூலி வேலைக்காக வந்துள்ளார். செங்கல் சூலையில் பணியாற்றியபோது, பிரபு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
பிரபு, ரேகாவின் மகள்களுக்கு பாலியல் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரேகா, அரிவாள் மற்றும் உருட்டுக் கட்டையால் பிரபுவை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை அய்யம்பாளையம் காவிரி ஆற்றில் வீசியுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த வருடம் செப்படம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. நான்கு மாதங்களாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது.
மகனை காணவில்லை என பிரபுவின் தந்தை அளித்த புகாரின் பேரில், நடந்த விசாணையை தொடர்ந்து ரேகாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.