நவீன துப்பாக்கி, ஸ்கோப்புடன் வலம்வந்த நபர்; அதிர்ந்துபோன திருப்பூர் மக்கள்.. உண்மை இதோ.!



Tiruppur High Tech Gun with scope Man Case Update 

மக்களை அச்சுறுத்தும் வகையில் திருப்பூரில் துப்பாக்கியுடன் வலம்வந்த நபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர் நகர் பின்புறமுள்ள தனியார் கார்டன் பகுதியில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில் நவீன ரக துப்பாக்கி ஒன்றுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், மரத்தில் இருந்த பறவையை சுட்டு வேட்டையாடினர். 

அதிர்ந்துபோன மக்கள்

கையில் திரைப்படங்களில் காண்பிக்கப்படுவது போல மிகப்பெரிய துப்பாக்கி இருப்பதை கண்டு அதிர்ந்துபோன மக்கள், வீடியோ எடுத்தபடி அவர்களிடம் கேள்விகளை எழுப்பினர். உடனடியாக அந்த கும்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இவர்கள் பறவைகளை வேட்டையாட வந்து சென்றவர்கள் என கூறப்பட்டது. 

இதையும் படிங்க: 15 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை., கை-கால் கட்டிப்போட்டு கொள்ளை.. திருப்பூரில் பயங்கரம்., 3 பேர் கைது.!

பறவையை சுட்டு வீழ்த்தியவர்கள்

இந்த விஷயம் குறித்து வீடியோ வெளியாகி வைரலாகவே, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் தீபாவளி நேரத்தில் 10 க்கும் மேற்பட்ட பறவைகளை இதே பாணியில் சுட்டு வேட்டையாடிய நிலையில், தற்போது வீடியோ வெளியாகி இருக்கிறது. 

ஒருவர் கைது

பொதுமக்கள் அச்சமடைந்ததைத்தொடர்ந்து, துப்பாக்கியுடன் வலம்வந்தவர்களில் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, அவர் திருப்பூரில் உள்ள கரும்பாளையம் பகுதியில் வசித்து வரும் கருப்பசாமி (வயது 39) என்பது தெரியவந்தது. அவர் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். 

ஏர் கன்

அதாவது, கருப்பசாமி வைத்திருந்தது ஏர் கன் ஆகும். இந்த ரக துப்பாக்கிக்கு உரிமம் பெறத் தேவையில்லை எனினும், பறவையை வேட்டையாடியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது போன்றவை காரணமாக கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளர்.

இதையும் படிங்க: திருப்பூர்: வேகம் + கவனக்குறைவால் கோரம்.. 2 இளம்பெண்கள் உட்பட 3 பேர் பலி.. அப்பளமாக நொறுங்கிய கார்.!