மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை., கை-கால் கட்டிப்போட்டு கொள்ளை.. திருப்பூரில் பயங்கரம்., 3 பேர் கைது.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், காரணம்பேட்டை பகுதியில் வசித்து வந்த மூதாட்டி சுப்பையன் மனைவி கண்ணம்மாள் (65), கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் அணிந்திருந்த 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு, வீட்டில் மிளகாய்பொடி தூவப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்திருந்த நிலையில், இறுதியில் மொத்தட்டி கொலையும் செய்யப்பட்டார். அவரின் கை-கால்கள் கட்டிபோடப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்தது.
3 பேர் கைது
இந்த விஷயம் குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆதிமூலத்தின் மகன் கருத்தப்பாண்டி, பொன்னுசாமி மகன் இசக்கிமுத்து, கொடிமுத்து மகன் இசக்கிமுத்து ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்.. கை, கால்கள் கட்டப்பட்டு பலாத்காரம்.!! 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கோர முடிவு.!!
இவர்களிடம் விசாரணை நடத்தியதில், 3 பேர் கும்பல் மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்துச் சென்றது உறுதியானது. விசாரணைக்கு பின்னர் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகளில் இருவர் தலைமறைவாக இருந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: போலி டாக்டரால் பறிபோன உயிர்.!! 22 வயது இளைஞருக்கு நேர்ந்த துயர முடிவு.!!