மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடூரத்தின் உச்சம்.. கை, கால்கள் கட்டப்பட்டு பலாத்காரம்.!! 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கோர முடிவு.!!
சிவகாசியில் 13 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகாசியில் 13 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியின் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் முடிவில் பல அதிர்ச்சியளிக்கும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.
கற்பழித்து கொலை
மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனை செய்ததில் சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் மூலம் சதீஷ்குமார் என்ற நபரை காவல்துறை கைது செய்தது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்தது கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... பொது இடத்தில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்.!! இளைஞர் கைது.!!
குற்றவாளியின் வாக்குமூலம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் வாக்குமூலமளித்த குற்றவாளி சதீஷ்குமார், சிறுமியை காதலிப்பது போல் நடித்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் சம்பவம் நடந்த தினத்தன்று சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் உறவு கொள்ள முயற்சி செய்துள்ளார். அதற்கு சிறுமி மறுக்கவே அவரது கை, கால்களை கட்டி பலவந்தமாக கற்பழித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து குற்றவாளி மீது போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை சிறையில் அடைத்தது.
இதையும் படிங்க: கள்ள உறவுக்காக நண்பன் கொலை.!! மனைவி, கள்ளக்காதலன் கைது.!!