திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"இது என் ஊரு., உயிரோட இருக்கமாட்டிங்க" - இரயில் பயணியிடம் போதையில் தகராறு செய்த இளைஞர்கள்.!!
திருப்பூர் இரயில் நிலையத்தில், சென்னை - ஆழப்புழா இரயிலில் ஏறிய போதை இளைஞர்கள் சிலர், அங்கு பயணம் செய்த பொதுமக்களிடையே பிரச்சனை செய்துள்ளனர். மேலும், புகைபிடித்துக்கொண்டு அவர்கள் பயணம் செய்த நிலையில், பயணிகள் அதனை தட்டிக்கேட்டனர்.
ஆசாமிகள் அதிர்ச்சி செயல்
போதையில் இருந்த ஆசாமிகள் பயணியை பார்த்து, "இது என் ஊரு, இங்கே நான் தான் சத்தமாக பேசுவேன். நீயும் - உன் பொண்டாட்டியும் உயிரோடு இருக்கமாட்டாய்" என சவுடால் விடுத்தனர். இந்த விசயம் குறித்த அதிர்ச்சி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.
இதையும் படிங்க: வடகலை Vs தென்கலை மோதலில்., நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சனை.! தலையில் அடித்து வேதனையுடன் சென்ற பக்தர்கள்.!
இந்நிலையில், இரயில் பயணத்தின் போது பயணிகளை மிரட்டிய பவுன் மற்றும் அசோக் ஆகிய இரண்டு இளைஞர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடியோ நன்றிபாலிமர் டிவி
ரயிலில் போதை இளைஞர்களால் பாதிப்புக்குள்ளான பெண் கொடுத்த பேட்டி #Tirupur | #Train | #DrunkMan | #Attack | #ViralVideo pic.twitter.com/L2MFDPgxcN
— Polimer News (@polimernews) May 26, 2024
இதையும் படிங்க: களிமண் கொண்டு வடிவமைக்கப்பட்ட ராயல் என்பீல்டு பைக்; கல்லூரி மாணவி சாதனை.!