களிமண் கொண்டு வடிவமைக்கப்பட்ட ராயல் என்பீல்டு பைக்; கல்லூரி மாணவி சாதனை.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கமலி. இவர் நிஃப்டி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். மாணவி கமலுக்கு ஏதேனும் ஒரு சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது.
இதனையடுத்து, தனது சொந்த முயற்சியில் களிமண் மற்றும் அட்டைகளை பயன்படுத்தி கமலி ராயல் என்பீல்டு இருசக்கர வாகனத்தை வடிவமைத்து அசத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் மாஸ்டர் பிளான்; பொருளாதார முன்னேற்றத்தில் அடியெடுத்துவைக்கப்போகும் பெண்கள்.!
157 நாட்கள் உழைப்பின் பலன்
இதற்காக மொத்தமாக சுமார் 95 கிலோ களிமண் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 157 நாட்கள் தொடர் உழைப்புக்கு பின்னர் ராயல் என்பீல்டு வாகனம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
மாணவியின் திறமைக்கான அங்கீகாரத்தை வழங்கும்பொருட்டு, லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கும் சாதனை தொடர்பான தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹாய் அனுப்பாதீங்க; வேண்டுகோள் வைத்த தமிழ்நாடு மின்சார வாரியம்..! காரணம் இதுதான்..!